ஒவ்வொரு ஆண்டும் கார்டியோவாஸ்குலர் (Cardiovascular) நோயால் இறப்பவர் விகிதம் அதிகரித்து வருகின்றன, இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி மனித உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இதய தினமாக நிர்ணயிக்கப்பட்டது.
நம் இதயத்தின் முக்கியத்துவத்தையும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
31 சதவீத உலகில் ,ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.9 மில்லியன் தனிநபர்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள்.
இதயம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.
இதயம் ஒரு நாளைக்கு சுமார் 115,000 முறை துடிக்கிறது
ஒரு நாளில் சுமார் 2,000 (Gallons blood )கேலன் இரத்தம் இதயத்தால் செலுத்தப்படுகிறது.
இதயத்தின் செயல்பாடு ஒரு மின்சார அமைப்புபோன்றது
நம் உடலில் இருந்து வெளியேறிய பிறகும் இதயம் தொடர்ந்து துடிக்கும் .
ஒரு பெண்ணின் இதயத்தை விட ஆணின் இதயம் சற்று கனமானது.
இதயத்தில் உள்ள செல்கள் பிரிவதில்லை, ஆகவே இதய புற்றுநோய்கள் மிகவும் அரிதானவை
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பல்வேறு வழிகள் உள்ளன, அதற்கு சீரான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதே ஒரு முக்கிய பங்காகும். இதை பின்பற்றுவதன் மூலம் நம் இதயம் சார்த்த நோய்களை தவிர்க்கலாம்.